பிக்பாஸ்க்குள்ள போகும் போது இதை சொல்லிட்டு போனான்: கலங்கும் தாய்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.

அதுவும் இந்த சீசனில் பிரிந்து வாழும் தாடி பாலாஜி, நித்யா இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.

நேற்றைய எபிசோட்டில் கூட கதை சொல்லும் டாஸ்கில் இருவரும், தங்களது மனதில் பட்டதையே பேசினார்கள்.

இதுகுறித்து தாடி பாலாஜியின் அம்மா கூறுகையில், மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து வாழவே பாலாஜிக்கு விருப்பம்.

மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான், விட்டுக்கொடுத்து போவது தான் வாழ்க்கை, இதை இரண்டு பேரும் புரிஞ்சுக்கணும், இரண்டு பேர்ல யார் ஜெயிச்சாலும் சந்தோஷம் தான்.

அவனுக்கு மகள் என்றால் உயிர், நான் சம்பாதிக்கிறதே என் பொண்ணுக்காக தான், யாருமே இல்லாம யாருக்காக வாழணும்னு வருத்தப்படுவான்.

பிக்பாஸ் வீட்ல இருந்து வெளியே வரும்போது நித்யா கண்டிப்பா என்னை புரிஞ்சுப்பான்னு சொல்லிவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.