சென்னையில் பல் மருத்துவர் தனது முதல் திருமணத்தை மறைத்து தன்னுடன் லிவ்விங் டூ கேதர் வாழ்க்கை வாழ்ந்து ஏமாற்றி விட்டதாக பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
ஆசிரியை மகாலட்சுமி, தனது வயதான தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டின் அருகே பல் மருத்துவமனை நடத்தி வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரேம் ஆனந்த்துக்கும் ஆசிரியை மகாலட்சுமிக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், தனக்கு முதல் திருமணம் ஆனதை மறைத்து ஆசிரியையிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்யாமல் “லிவ்விங் டூ கேதர்” முறையில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார் பிரேம்.
முதல் திருமணம் பற்றி தகவல் தெரிய வந்த மகாலட்சுமி, பிரேம் ஆனந்திடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
மேலும், மகாலட்சுமியை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்று பிரேம் ஆனந்த் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் பல் மருத்துவர் பிரேம் ஆனந்தை கைது செய்து காவல்துறை விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர்.