காரைநகரில் பாடசாலையில் பதில் கடமை புரியும் அதிபர் ஒருவர், பாடசாலை ஆசிரியரின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று துரத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைநகரிலுள்ள பாடசாலையின் அதிபர் அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார். மூப்பு அடிப்படையில் அங்குள்ள ஆசிரியர் ஒருவரே பதில் அதிபராகப் பணியாற்றி வருகின்றார்.
அதிபராகக் கடமையாற்றி வரும் ஆசிரியருக்கும், அங்கு பணியாற்றும் பெண் ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அதிபராகக் கடமையாற்றி வரும் ஆசிரியர், பெண் ஆசிரியரின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று பாடசாலை கேற்றின் வெளியே விட்டுள்ளார்.
ஒருமையில் அந்தப் பெண் ஆசிரியரையும் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பெண் ஆசிரியர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.