விக்னேஸ்வரன் வடக்கில் ஒன்றையும் செய்யவில்லை!

வடமாகாண மக்களுக்கு வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒன்றும் செய்ய வில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வடக்கு மக்களுக்காக வடக்கு முதல்வர் ஒன்றும் செய்யவில்லை. வடக்கு மாகாண சபையின் காலம் முடிந்ததும் உடனே தேர்தலை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மாற்றம் ஒன்றை கொண்டு வந்தால் மட்டுமே வடக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.