சர்க்கரை நோயை விரட்ட இந்த பொருள் போதுமே….

கடவுள் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் வில்வ இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

இதன் இலை, தண்டு மற்றும் பழம் என ஒட்டுமொத்த தாவரமும் நமக்கு பலனைத் தருகிறது.

இதன் இலைகளை கொண்டு சர்க்கரை நோய் உட்பட பல நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.

சர்க்கரை நோய்

7 வில்வ இலைகளை எடுத்து 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், இதனை வடிகட்டிய தேநீரை தினமும் மூன்று முறை பருகினால் சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.

சருமப் பிரச்சனைகள்

உலர வைத்துக் கொண்ட வில்வ இலைகளுடன், மஞ்சள் கிழங்கு மற்றும் அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும், இதனை காயவைத்து பொடியாக்கி கொண்டால் சரும பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.

வயிற்றுப் பிரச்சனைகள்

110 மில்லி லிட்டர் தண்ணீரில் வில்வ பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும், வயிற்றுப் போக்கால் அவதிப்படும் நபர்கள் ஒருநாளைக்கு ஒருவேளை என குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

காய்ச்சல்

110 மில்லி லிட்டர் தண்ணீரில் வில்வ வேரை போட்டு கொதிக்க வைத்தால், காய்ச்சல் காணாமல் போகும்.