உடல் எடை குறையணுமா?

ஒருவர் உண்ணும் உணவுகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தாலே, உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்.

குறிப்பாக இரவு நேரத்தில் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடையக்கூடியதாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் இரவில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு உடல் உடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

உடல் எடை குறைய இரவில் தூங்குவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியவை

அமிலங்கள் நிறைந்த உணவுகளை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஹார்மோன் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்கும்.

எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளை முழுவதுமாக இரவில் தவிர்க்க வேண்டும். கொழுப்புகள் உடலில் தங்கி எடை அதிகரிக்கும்.

இரவில் தூங்குவதற்கு முன் சிறிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உதாரணத்திற்கு Push Ups, Cardio உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்யலாம். 15 முதல் 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம்.

தூங்குவதற்கு முன் க்ரீன் டீ, Rooibos டீ குடிக்க வேண்டும். இது தொப்பையை குறைக்கும்.

தாமதமாக தூங்குவதை தவிர்த்துவிடுங்கள். சரியான நேரத்திற்கு இரவு தூங்க செல்லுங்கள். அப்போதுதான் உங்களது ஹார்மேன் அளவு சீராக இருந்து மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.