உங்கள் தலைமுடி பிசுபிசுப்பாக காணப்படுகின்றதா? இதை ட்ரை பண்ணுங்க

பெரும்பாலும் சில பெண்களுக்கு தலைமுடியின் வேர்கால்களில் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெயின் காரணமாக பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியவை ஏற்படுவதுண்டு.

இதற்கு காரணம் செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம்.

செபேஷியஸ் சுரப்பி சுரக்கும் எண்ணெய் கூந்தலை வெளிப்புற மாசிலிருந்தும் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கும்.

அதுவே அளவுக்கதிகமாக இந்த எண்ணெய் சுரந்தால், கூந்தலில் பிசுபிசுப்பான நிலையை கொண்டு தரும். இதனை அடியோடு விரட்ட சில எளிய முறை டிப்ஸ்களை பார்ப்போம்.

  • எண்ணெய் பசைக் கூந்தலுக்கான ஷாம்பு உபயோகித்து வாரம் 3 முறை கூந்தலை அலச வேண்டும்.
  • கூந்தல் அதிக எண்ணெய் பசையுடன் இல்லை என்றால், ஷாம்பு குளியலுக்குப் பிறகு மிதமான கண்டிஷனர் உபயோகிக்கலாம்.
  • கூந்தலுக்கு அடிக்கடி எண்ணெய் வைக்கக் கூடாது. இவை கூந்தலை பலவீனமாக்கும். முடியை வேகமாய் உதிரச் செய்யும்.
  • கூந்தலை அதிகமாக சீவுதல் கூடாது ஏனெனில் அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, எண்ணெய் சுரப்பை அதிகப்படுத்தும்.
  • நீரில் கால் கப் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறியபின் வடிகட்டி அந்த நீரை தலையில் தடவுங்கள். 15 நிமிடங்கள்கழித்து, தலையை அலசவும். இவ்வாறு செய்தால், அதிகப்படியான எண்ணெய் சுரப்பது குறையும்.
  • 15 நாட்களுக்கொரு ஒரு முறை தலைக்கு ஹென்னா உபயோகிப்பதும், அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.
  • அதிகப்படியான எண்ணெய் கூந்தலில் சுரந்தால் எலுமிச்சை சாறினை தலையில் தேய்த்து அலசினாலும் கட்டுப்படும்.
  • தினசரி உணவில் நிறைய பழங்களும் காய்கறிகளும் எடுத்துக் கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சை, பாதாம், பெர்ரி மற்றும் நிறைய பழ ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும்.