வயது வித்யாசமின்றி மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுண்டு. அதில் ஒன்று தான் கணைய புற்றுநோய்.
கணையத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் அதீத உடல் எடை, சர்க்கரை நோய், மரபணு குறைபாடுகள், புகைப்பழக்கம், ஆகியவை ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இந்த கணைய புற்றுநோய் முதலில் கணையத்தில் உள்ள திசுக்களை பாதிக்கும். மெல்ல பின்னர் செல்களை பாதிக்கச் செய்து ஒட்டுமொத்த இயக்கத்தையே பாதித்து விடும்.
கணையம் நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகக்கூடிய என்சைம்களை கொடுப்பதற்கும் இன்ஸுலின் உற்பத்திக்கும் மிகவும் அவசியமாகும்.
கணைய புற்றுநோய்க்கான அறிகுறிகள்
- கீழ் வயிறு அல்லது கீழ் முதுகு வலி அடிக்கடி ஏற்பட்டால் அவை தான் கணையப்புற்றுநோய்க்கான முதல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
- கணையத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மஞ்சள் காமாலை ஏற்படும்
- திடீரென்று அளவுக்கு அதிகமாக எடை குறைவது.
- வயிற்றில் அதிகமாக அமிலம் சுரப்பது நெஞ்செரிச்சல் ஏற்படுவது. வழக்கமாக சாப்பிடும் உணவே நம்மால் சாப்பிட முடியாமல் போவது ஆகியவை ஏற்படும்.
- சிறுநீரின் நிறம் மாறியிருக்கும். இளம் மஞ்சள், பிரவுன் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருக்கும்.
- வழக்கமாக இல்லாது மலத்தின் நிறமும் மாறியிருக்கும். மலம் வெளியேறும் போது வலியெடுக்கும்.
- கணையத்தில் கட்டி ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த செரிமானத்தையும் பாதிக்கும். இதனால் உமட்டல், கேஸ் பிரச்சனைகள் ஏற்படும்.
- உணவு செரிமானம் ஆவதில்லை என்பதால் அதிகமாக பசிக்காது.எப்போதும் வயிறு நிறைந்து இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
- கணையத்தில் ஏற்படுகிற கட்டி இன்ஸுலின் உற்பத்தி செய்யும் செல்களை எல்லாம் அழித்திடும் என்பதால் அது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
- உணவிலிருந்து கிடைக்கூடிய சத்துக்கள் எதுவும் கிடைக்காததாலும் ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருந்த குளுக்கோஸும் தடைப்பட்டதால் அதீத சோர்வு ஏற்படும்.