பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளாக நாளாக போட்டியாளர்களின் சுயரூபம் தெரிந்து வருகிறது. ஓவ்வொருக்கும் மனதில் சிலரால் விரக்தி இருப்பது தெரிந்ததே. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆர்.ஜே. வைஷ்ணவி.
பாத்ரூம் மூலையில் உட்கார்ந்து திடீரென தேம்பி அழுதார். என்னவென்று மற்றவர்கள் கேட்கையில் அவர் என்னை எந்த நேரமும் கிண்டல் செய்கிறார்கள் என அழுதார். பின்னர் பலரும் சிரிக்க வைக்க அவர் உடனே சிரித்து விட்டார்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்து மும்தாஜின் நடவடிக்கைகள் மீது அதிருப்தியில் இருப்பது இவர் தான்.