பிக்பாஸ்-2 நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஏதாவது பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. அதிலும் இன்று வந்த ப்ரோமோ ஒன்று எல்லோரையும் கோபப்படுத்தியது.
இந்த ப்ரோமோவில் எல்லோரும் ஏதாவது கிறுக்கத்தனமாக செய்ய வேண்டும் என்று டாஸ்க் போல.
அதற்காக வீட்டில் இருக்கும் இரண்டு நடிகைகள் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் சில ப்ரோமோ வெளிவர, பலரும் அதிர்ச்சியாகினார்கள்.
இந்த நிகழ்ச்சியை வீட்டில் உள்ளவர்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்த்து வருகின்றனர், அப்படியிருக்க இந்த மாதிரி காட்சிகளை காட்டுவது என்ன நியாயம் என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/dKybhYEmlZ
— Vijay Television (@vijaytelevision) June 22, 2018