மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தனது மகனின் தவறான நடவடிக்கையால் தர்ம சங்கடத்துக்கு ஆளாகியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரது தயாரிப்பில் நடிகர் சல்மான்கான் இரண்டு படங்களில் நடிப்பதாக இருந்தது.
ஆனால், சல்மான்கான் திடீரென நடிப்பதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகனான அர்ஜூன் கபூர் தான் என்று கூறப்படுகிறது.
சல்மான்கானின் தம்பி அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி மலாய்க்காவும், அர்ஜூன் கபூரும் நெருக்கமாக இருப்பதாக பாலிவுட் திரையுலகில் பேசப்படுகிறது.
மேலும், மலாய்க்கா தனது கணவர் அர்பாஸ் கானை பிரிந்ததற்கு காரணம் அர்ஜூன் கபூர் தான் என்றும் தகவல் பரவியது, இதனால் அர்ஜூன் கபூர் மீது சல்மான்கான் கோபத்தில் உள்ளாராம்.
இதன் காரணமாகவே அவரது தந்தையின் தயாரிப்பில் சல்மான் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. எனினும், தனிப்பட்ட முறையில் போனி கபூர் மீது சல்மான் கானுக்கு எந்த கோபமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.