வேலை அற்ற பட்டதாரிகளிடம் இருந்து இரண்டாக் கட்டமாக விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலகங்களிலேயே பதிவுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.வேலையில்லாப் பட்டதாரிகளில் முன்னர் இணைத்தளம் ஊடாகவும் மாவட்டச் செயலகத்திலும் பதிவுகளை மேற்கொண்ட அனைவருக்கும் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. இருப்பினும் குறித்த விண்ணப்பத்தினை கோரிய அமைச்சு கண்டிப்பாக 2016-12-30ம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் நிபந்தனை விதித்திருந்தனர். இதனால் பலர் விண்ணப்பிக்கவில்லை மேலும் பலர் விண்ணப்பித்திருந்தனர் .
இதேநேரம் பல்கலைக் கழகங்களில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஊழியர் சங்கம் 45நாட்கள் தொடர் போராட்டம் நடாத்தியமையினால் உள் வாரி மாணவர்களின் பெறுபேறுகள் தாமதமாக கிடைத்ததாகவும் சிலர் முறையிட்டுள்ளதோடு அதிகமான வெளிவாரி மாணவர்களே சந்தர்ப்பத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு வயது எல்லையும் ஓரு பிரச்சணையாகவே கானப்பட்டது.
இவற்றினையும் கருத்தில்கொண்ட அமைச்சு இவ்வாறு சந்தர்ப்பங்களை தவறிய அணைத்து வகையான பட்டதாரிகளிற்கும. 2018-06ம் மாதம் வரையில் பட்டம் பெற்ற 45 வயதிற்கு உட்பட்ட அனைவரையும் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.இதேநேரம் இம்முறை பதிவுகளை பிரதேச செயலகங்களில் மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.