நெல்சன் மண்டெலாவின் 100வது பிறந்ததினம் யாழில் நினைவு கூரப்பட்டது!

சமாதானத்தின் தந்தை என அழைக்கப்படும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் நூறாவது பிறந்ததினம் இன்று யாழில் நினைவு கூரப்பட்டது.

இங்கை தென்னாபிரிக்க தூதுவராலயம், யாழ் மாநகர சபை மற்றும் இலங்கை நெல்சன் மண்டேலா பௌண்டேசன் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த செஞ்சுறி ஆப் மண்டேலா எனும் இந்நிகழ்வு இன்று யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழவில் தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரொபினா பீ. மார்க்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நூலகத்தின் உசாத்துணை பகுதியில் நெல்சன் மண்டேலாவிற்கென தனியான பகுதி ஒன்று தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ரொபினா பீ. மார்க்ஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன் தென்னாபிரிக்க தூதுவரினால் நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு பற்றிய அரியவகையான ஒன்பது நூல்கள் யாழ் பொதுநூலக நூலகர் சுகந்தி சற்குணராஜாவிடம் கையளிக்கப்பட்டதுடன், யாழ் மாநகர சபை சார்பில் முதல்வர் ஆர்னோல்டினால் தென்னாபிரிக்க தூதுவருக்கு நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் யாழ் மாநகர ஆணையாளர் ப.ஜெயசீலன் யாழ் மாநகர முதல் பெண்மணி நளாயினி ஆர்னோல்ட் இலங்கை நெல்சன் மண்டெலா பௌண்டேசன் நிறுவுனர் ஜிப்ரி மொஹமட் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டனர்.