சர்கார் படத்துக்காக கோடிக்கணக்கில் லஞ்சமா? விஜய்க்கு எழுந்த பிரச்சனை

விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒரு சர்ச்சை கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது.

அந்தவகையில் இம்முறை டைட்டிலும், பர்ஸ்ட்லுக்கும் வெளியானதிலிருந்தே சர்ச்சை ஆரம்பமாகியுள்ளது.

விஜய் சிகரெட் புகைப்பது போன்ற அந்த புகைப்படத்தை நீக்க வேண்டும் என பலரும் கூறிவருகின்றனர்.

பசுமை தாயகம் என்ற அமைப்பு அந்த காட்சியை முற்றிலுமாக நீக்காவிட்டால் அதற்கான விளைவுகளை நடிகர் விஜய்யும், கோடிக்கணக்கில் சிகரெட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிய சன்பிக்சர்ஸ்ம் சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.