அனைத்து திரையரங்குகளிலும் விஜய் பேனர் கிழிப்பு- ஷாக் ஆன விஜய் ரசிகர்கள்

நேற்று விஜய்யின் 44வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இக்கொண்டாடத்தில் ரசிகர்கள் பலர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, இரத்தத்தானம் வழங்குவது போன்றவற்றில் ஈடுப்பட்டனர்.

ஆனால் ஒரு சிலரது செயல்பாடுகள் பார்ப்போரை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. மற்ற நடிகர்களின் ரசிகர்களை கேவலப்படுத்துவது, அவர்களின் ஹீரோக்களின் பேனர்களை கிழிப்பது போன்றவற்றை செய்தனர்.

இதோடு மட்டுமின்றி அஜித் குடும்பத்தினரை தாக்கி விஜய் ரசிகர் ஒருவர் பேசியது எல்லோரிடத்திலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் அஜித் ரசிகர்கள் இன்று ஸ்பெஷல் ஷோ ஓடிய பல திரையரங்குகளில் விஜய் பேனரை கிழித்துள்ளனர், இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.