இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது குறித்து ஹூவாவே டெக்னோலஜி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றின் போது, குறித்த நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் மைக்கல் மெக்டொனால்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் பேசிய அவர், “ஆசிய பசுபிக் நாடுகளில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது பற்றி ஹூவாவே டெக்னோலஜி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.இவற்றில் இலங்கையும் அடங்கும். ஸ்மார்ட் சிற்றி என்பது நகர நிர்வாகத்தின் செயற்றினை மேம்படுத்துவதற்காக தகவல், தொடர்பாடல், தரவுத் தொழில்நுட்பம் போன்றவற்றை ஒன்றிணைக்கும் பொறிமுறை உள்ள நகரமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.