சமாதானம் செய்துவைத்த குடும்பம்: தவறான முடிவெடுத்த இளம்பெண்

தமிழகத்தின் தேனி‌ மாவட்டம்‌ போடிநாயக்கனூரில்‌ குடும்ப பிரச்னை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி கீழத்தெருவை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மருதுபாண்டி. இவருக்கும் இவரது மனைவி கௌசல்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு‌ கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர்‌.

இந்த நிலையில் இருவரையும் ச‌‌மாதானப்படுத்தி‌ குடும்பத்தினர் சேர்த்து வைத்தனர். ஆனால் மருதுபாண்டி குடிப்பழக்கத்திற்கு‌ அடிமையாகி மனைவி கௌசல்‌யாவை‌ துன்புறுத்தி ‌வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ‌கணவரின் செயல்களால் மனமுடைந்த‌ கௌசல்யா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவல்துறையி‌‌ன‌ர் ‌அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கௌசல்யா மருதுபாண்டி தம்பதிக்கு 3‌ வயது‌ ஆண் குழந்தை உள்ளது.

கைக்குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.