ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவே இதுவரை நம்பப்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் ஆதிமனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றவில்லை தமிழ்நாட்டில் தான் தோன்றியிருக்கிறார்கள் என்று அகழாய்வு முடிவு ஒன்று கூறுகிறது.
அந்த வியக்கவைக்கும் அகழாய்வு திருவள்ளூரில் உள்ள பட்டறைபெரும்புதூரில் ஆதிமனிதன் வாழ்ந்ததாக நிரூபிக்கிறது.
திருவள்ளூர் குடியம் பகுதிகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்த கற்கால வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்பின்னர் சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் இருந்து வந்ததை சான்றுகளோடு நிரூபித்தனர்.
மேலும் இதனை தொடர்ந்து அதிரம்பாக்கம் பட்டறைபெரும்புதூர் பகுதிகளில் தமிழக அரசு அகழாய்வுகளில் ஈடுபட்டது. சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த அகழாய்வில் இதுவரை 351 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகளை அமைச்சர் மா பாண்டியராஜன் நேற்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆதிமனிதன் திருவள்ளூரில் தோன்றிய புதிய வரலாறு ஒன்றை இந்த அகழாய்வு நிரூபித்திருப்பதாக தெரிவித்தார்.
3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் நமக்கு இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன. கொடுமணல், ஆதிச்சநல்லூர் பகுதிகளும் அகழாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த அகழாய்வில் 24 அடியில் 23 உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.