சொந்த வீடு இல்லை: தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தார்

மும்பையில் ஒரு வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் சொந்த வீடு இல்லை என்கிற காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மும்பையில் கெர்வாடி பகுதியில் அரசு ஊழியர்கள் வாழும் பகுதியில் மேற்கண்ட தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.

அந்த வீட்டை உடைத்து பொலிஸார் உள்ளே நுழைந்த போது அங்கே கணவன் மனைவி இரண்டு பேர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இறந்து கிடந்தனர்.

தற்கொலை நடந்த வீட்டில் அதற்கான கடிதமும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதில் தங்களுக்கு மும்பையில் சொந்த வீடு இல்லை என்றும். அந்த காரணத்திற்காக தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இறந்த குடும்பத்தில் கணவன் பெயர் ராஜேஷ் பிங்காரே , இவர் ஒரு அரசாங்க ஊழியர் , இவர்களது குடும்பத்தை பிங்காரே குடும்பம் என்று அங்குள்ளவர் அழைக்கின்றனர்.

குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதில் ராஜேஷின் உடல் அருகில் ஒரு கத்தி இருந்துள்ளது. ராஜேஷ் தனது கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியை அறுத்து தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களது உடலை கைப்பற்றிய போலீசார் அங்குள்ள சைமன் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

வாழ்வதற்கான காரணங்களை வலுப்படுத்தி கொள்ளாமல் இப்படி மரணத்தை வரவேற்பது தவறு என்று மக்கள் அனைவரும் உணரவேண்டியது அவசியம் என்றுதான் தோன்றுகிறது.