சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு தான் கொடுத்த பேட்டி காரணமாக அரச குடும்பம் தன் மீது கோபத்தில் இருப்பார்கள் என்ற அச்சத்தில் இருக்கிறார் பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் தந்தை தாமஸ் மெர்க்கல்.
வணக்கம் பிரித்தானிய என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தாமஸ் மெர்க்கல், தனது மகளின் காதல் திருமணம் மற்றும் தனது மருமகன் ஹரி பற்றியும் பேசியிருந்தார்.
மேலும், தனது மருமகன் மிகவும் நல்லவர் என்றும் மெர்க்கல் விரைவில் குழந்தைபெற்றுக்கொள்வார், அதுமட்டுமின்றி விரைவில் இளவரசர் ஹரி மற்றும் தனது மகளை பர்க்கிங்ஹாம் அரண்மனையில் சந்திக்கவிருப்பதாக பேட்டியளித்திருந்தார்.
ஆனால், தனது பேட்டி குறித்து இதுவரை அரசகுடும்பம் சார்பில் எவ்வித பதிலும் வரவில்லை. தான் சுமூகமாக பேட்டி அளித்திருந்தபோதும் அரச குடும்பம் இதனை கண்டுகொள்ளவில்லை. மேலும் தந்தையர் தினத்துக்கும் தனது மகள் வாழ்த்து தெரிவிக்காத காரணத்தால், அரச குடும்பம் தன் மீது கோபத்தில் இருக்குமோ என அச்சம் கொண்டுள்ளதாக தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.