இந்தியாவின் சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் பாரம்பரியமிக்க மூன்று வகையான அரிசி வகைகளை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.இக்கண்டுபிடிப்பு குறித்து அறிவியலாளர் தீபக் சர்மா கூறும் போது ‘ராய்ப்பூரிலுள்ள இந்திரா காந்தி க்ரிஷி விஷ்வவித்யாலயா (ஐ.ஜி.கே.வி) மற்றும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்திலும் (பார்க்) புற்றுநோயை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டோம்.
ஆய்வுகளின் முடிவில் சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளான கத்வான், மகாராஜி, லைச்சா முதலிய அரிசிகளில் புற்றுநோயை எதிர்த்து போராடும் திறன் உள்ளது கண்டறியப்பட்டது. இவைகள் நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்களை குணப்படுத்தும் பண்புகளைப் பெற்றுள்ளன. அதிலும் லைச்சா வகை அரிசி புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கவும், செல்களை அழித்து குணப்படுத்தவும் செய்கிறது.
மேலும், இவ்வரிசி பல நோய்களை நீக்கும் மருந்தாகவும், தோல் நோய்களுக்கும் குறிப்பாக பஸ்தார் பழங்குடி இனத்தினர் வசிக்கும் பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
கத்வான் வகை அரிசி கீல்வாதம் முதலிய நோய்களை குணப்படுத்தும். இவைகளை தினசரி 200 கிராம் உட்கொள்வதன் மூலம் பயன் பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்