தமிழ் சினிமாவில் 90களில் வந்த எத்தனையோ பாடல்கள் இப்போதும் இளைஞர்கள் மத்தியிலும் பேவரெட். அப்படி இப்போது உள்ள இளைஞர்கள் ரசிக்கும் பாடல்களில் அதிகம் பாடியிருப்பவர் ஜானகி.குறிப்பிட்டு இவரது பாடல்கள் நிறைய சொல்லலாம். விஜபி படத்தில் கூட பாடி அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார். இந்த நேரத்தில் இவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக வைரலாக செய்தி பரவ ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.இந்த நிலையில், யாழிலிருந்து செயற்படும் பிரபல இணையத்தளம் ஒன்று பாடகி ஜானகி அம்மாவைப் பற்றி தவறான தகவல் வெளியிட்டிருந்தது. ஆயினும் இந்த செய்தி தவறு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.ஆனால், உண்மையில் அவர் உடல் நலத்தோடு நன்றாக இருக்கிறாராம். அதனால் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது தரப்பில் கூறப்படுகின்றது. எனவே பாடகி ஜானகி அம்மாவை பற்றி பரவும் தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.