தோசை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட், தக்காளி சேர்த்து சத்தான கலர்புல்லான தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
- பச்சை அரிசி – 1 கப்
- புழுங்கல் அரிசி – 1 கப் [வேண்டுமெனில், அரை கப் அவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்]
- தக்காளி – 1
- கேரட் துருவியது – இரண்டு கப்
- மிளகு – 1 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் – 6
- பெருங்காயத் தூள் – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை
- அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கேரட், தக்காளி, மிளகாய், மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்த விழுதை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- கடைசியாக இதில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை சேர்த்து கொள்ளவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான கேரட் – தக்காளி தோசை ரெடி. இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.