பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் தாடிபாலாஜி, நித்யாவின் சண்டை… கோபத்தில் சரமாரியாக பேசிய பாலாஜி

நாள்தோறும் காலையில் மக்களின் எதிர்பார்ப்பு பிக்பாஸ் ப்ரொமோ தான். அன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சியினை சிறு ப்ரொமோவாக வெளியிட்டு வருகின்றனர்.

மும்தாஜ், ஷாரிக் உறவினர் போன்று சொந்தம் கொண்டாடி மிகவும் உரிமையாக பழகி வந்தனர். தற்போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

இன்று வெளியாகிய முதல் ப்ரொமோவில் ஷாரிக் நீச்சல் குளத்தினை சுத்தம் செய்யவேண்டும் என்று மும்தாஜ்க்கு உத்தரவு போட பண்ண மாட்டேன், முடியாது என்று கோபத்தில் கூறுகிறார். இதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கடும் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.


கடந்த சில தினங்களாக பாலாஜியுடன் சமாதானமாக இருக்கும் நித்யா இருவரும் இவ்வாறு ஒற்றுமையாகிவிடுவார்கள் என்று நினைத்திருந்த தருணத்தில் மீண்டும் இருவருக்குள் பூகம்பம் எழுந்துள்ளது.

இருவரின் பிரிவினைக் குறித்து செண்ட்ராயன் மீண்டும் பேசியுள்ளார். அதற்கு நித்யா மறுப்பு தெரிவிக்க இதனால் கோபமடைந்த தாடி பாலாஜி தகாத வார்த்தையினை பயன்படுத்தி திட்டியுள்ளார்.