பிக் பாஸிற்காக மோகன் லாலுக்கு இவ்வளவு சம்பளமா?

தமிழ் சினிமாவில் புத்தம் புது நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மெகா வரவேற்பை பெற்று வந்தது. தமிழுக்கு தான் இந்த நிகழ்ச்சி புதிது. ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீசன்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

மலையாள சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தற்போது 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது மோகன் லால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சம்பளம் எவ்வளவு? என்ற தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இந்த நிகழ்ச்சிக்காக மோகன் லாலுக்கு ரூ 12 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

இது மோகன் லால் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்பதால் அவரது ரசிகர்களே மோகன் லாலின் சம்பளத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

bigg boss