ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரி மாதம் 10ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய கருத்துக்கள் இப்போதே இலங்கை அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் பற்றி இப்போதே காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கு முக்கிய காரணம் தேர்தல் சட்டம் இலங்கையில் மாற்றம் பெற்றிருப்பதால் அடுத்த முறை மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது ஆகவே மகிந்த ராஜபக்ஸவின் அணியில் இருந்து அதாவது பொதுஜன மக்கள் பெரமுன கட்சியின் சார்பில் மகிந்தவின் ஆசீர்வாதத்தோடு கோத்தபாய ராஜபக்ச களமிறங்க உள்ளமையே ஆகும்.
இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுந்திரக்கட்சியில் ஒரு வேட்பாளரும், ஐ.தே.கட்சியில் ஒரு வேட்பாளரும், மகிந்த அணியில் ஒரு வேட்பாளரும் களமிறங்க உள்ளனர் இதனால் மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு ஸ்ரீகோட்டா அரசியல் வட்டாரத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி பல முக்கிய அரசியல் தலைவர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது.
“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணியில் கோத்தபாய இறங்கினால் ஐ.தே.க சார்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காராவை களமிறக்குவது” என்ற ரணிலின் முடிவு தான் தென் பகுதி அரசியலில் அன்மைய ஹொட் ரொபிக்
குமார் சங்கக்கார விளையாட்டு வீரனாக இருந்தாலும் அவர் இலங்கையில் சட்டமாணி பட்டம் பெற்ற ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.
குமார் சங்கக்காராவின் தந்தையும் கண்டி மாவட்டத்தில் பிரபல சட்டத்தரணி ஆவார் அத்தோடு அவர் கண்டி மாவட்ட ஐ.தே.கட்சியின் முக்கிய ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சங்கக்காராவின் தந்தை 83 ஆம் ஆண்டு கலவர நேரத்தில் பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றி கண்டி தமிழர்களோடு மிக நெருக்கமான உறவு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு குமார் சங்கக்காரா தமிழர்களுக்கு சார்பாக பல இடங்களில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அன்மையில் கூட மே18 நினைவுநாளில் ருவிற்றறில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இவற்றின் மூலம் தமிழ் மக்களின் செல்வாக்கு சங்காவிற்கு இருப்பதால் அடுத்த தேர்தலில் சங்கா களமிறங்கினால் தமிழர்களின் வாக்கையும் இலகுவாக பெற முடியும் என்று சிந்திக்கிறது ஐ.தே.க தலைமை.
அத்தோடு சிங்கள மக்கள் மத்தியில் சங்காவிற்கு மிகையான செல்வாக்கு இருப்பதால் இலகுவான வெற்றியை பெறலாம் என்று எதிர்பாக்கிறது கட்சி தலைமை.