ஐக்கிய அமீரகத்தின் மனித வளத்துறை அமைச்சகம் அங்கு வீட்டு வேலைக்கு பணியமர்த்தப்படும் நபர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைத்து அறிவித்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் செயல்பட்டுவரும் Tadbeer மையங்கள் வாயிலாக பணியமர்த்தப்படும் இந்த ஊழிர்களுக்கு எதிர்வரும் ஓராண்டு காலம் திருத்தப்பட்ட இந்த ஊதியம் அமுலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளனர்.
மட்டுமின்றி எந்த நாட்டில் இருந்து ஊழியர்கள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்களோ அந்தந்த நாடுகளின் அதிகாரிகளை கலந்தாலோசித்து ஒவ்வொரு 6 மாதத்திற்கும் இந்த ஊதியத் தொகை மாற்றியமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
இதில் நான்கு பிரிவாக மனித வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் பிரிவானது குறுகிய கால ஒப்பந்தம்.
6 மாத கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம். ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் பணியமர்த்திய குடும்பத்திலேயே நிரந்தரமாக பணியை தொடரலாம், ஆனால் இதற்காக கட்டணம் ஒன்றை நிர்ணயித்துள்ளனர்.
அதன்படி, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய நாட்டவர்களுக்கு முதல் 6 மாத காலத்திற்கு மாதம் 2,500 திர்ஹாம் ஊதியமாக வழங்கப்படும்.
இலங்கையருக்கு 2,200 திர்ஹாம். இந்தியா, வங்கதேசம், கென்யா,எத்தியோப்பியா நாட்டவர்களுக்கு 2,250 மற்றும் நேபாளம் நாட்டவர்களுக்கு 2,300 திர்ஹாம் ஊதியமாக வழங்கப்படும்.
6 மாத கால ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா நாட்டவர்கள் பரிமாற்ற கட்டணமாக 8,000 திர்ஹாம் செலுத்த வேண்டும்.
அடுத்த பிரிவில் 2 ஆண்டுகளுக்காக ஒப்பந்தம் செய்யப்படும். ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் மேலும் நீட்டிக்கப்படமாட்டார்கள்.
2 ஆண்டு கால ஒப்பந்தத்தில் பணியில் சேரும் நபர்களில் இலங்கை, உகாண்டா நாட்டவர்களுக்கு மாதம் 2,300 திர்ஹாம் ஊதியமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.
வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கு மாதம் 2,250 திர்ஹாம் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக ஐக்கிய அமீரகத்தின் மனித வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.