பிரித்தானியாவை உலுக்கிய 4 வயது சிறுமியின் மரணம்: பொலிசில் சிக்கிய தாயார்

பிரித்தானியாவின் சவுத் வேல்ஸ் பகுதியில் பெற்ற பிள்ளையை கொடூரமாக கொன்ற தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சவுத் வேல்சின் Rhondda பகுதியில் பெற்றோருடன் குடியிருக்கும் 4 வயதான Amelia Brooke Harris பெற்ற தாயாரால் 3 வாரங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை கார்டிஃப் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் குழந்தை அமேலியாவின் தாயார் Carly Ann Harris இன்று ஆஜராகியுள்ளார்.

சம்பவத்தன்று குழந்தை அமேலியாவின் உடலை மரத்தாலான தேநீர் மேஜை ஒன்றின் மீதிருந்து பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து குழந்தையின் தாயார் Carly Ann Harris என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற விசாரணை துவங்கியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் எவரும் கலந்துகொள்ளவில்லை.

விசாரணையின் முடிவிலேயே குழந்தை அமேலியா ஏன் கொல்லப்பட்டார் என தெரியவரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.