பிரபல திரைப்பட நடிகையான ரேணு தேசாய் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து தொந்தரவு தரும் வகையில் கமெண்ட் செய்து வருவதால், அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகரான பவன் கல்யாண் மற்றும் நடிகை ரேணு தேசாய் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2012-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். விவாரத்து பெற்ற அடுத்த ஆண்டிலே பவன் கல்யாண் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ரேணுராய் சமீபத்தில் தன்னுடைய நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதைக் கண்ட ரசிகர்கர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் பவன் கல்யாண் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு ரசிகர், மேடம் தயவு செய்து நீங்கள் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டாம். எத்தனையோ பெண்கள் தனியாக வாழ்ந்து காட்டாவில்லையா? மீண்டும் திருமணம் செய்து உங்கள் மதிப்பை கெடுத்து கொள்ளாதீர்கள்.
நான் உங்களை என் அம்மாவாக நினைக்கிறேன், தயவு செய்து திருமணம் செய்யாதீங்க அம்மா என்று கூறியுள்ளார்.
இப்படி அவர் இரண்டாவது திருமணம் குறித்து பவன் கல்யாண் ரசிகர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால், டுவிட்டரில் இருந்து ரேணு தேசாய் வெளியேறியுள்ளார்.
அதுமட்டுமின்றி நான் என்னுடைய புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறேன் என்று ரேணு தேசாய் இறுதியில் கூறியுள்ளார்.