பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் ஷ்ருதிஹாசன்!

பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் பிக்பாஸ் இரண்டாம் பாகத்தை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். முதல் பாகத்தை போலவே தினம் ஒரு சர்ச்சை, பிரச்னை என சுவாரசியத்துக்கு துளியும் பஞ்சமில்லை.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஸ்ருதிஹாசன் செல்லவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், போட்டியாளராக அல்ல.

விஸ்வரூபம் 2 படம் சிங்கிள் பாடல் ஜூன் 29-ல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும், அந்த பாடலின் பாடல் வரிகள் கொண்ட விடியோ சாங்காக வருகிற 30 ஆம் திகதி கமல்ஹாசன் பிக்பாஸ் ஷோவில் வெளியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது அந்த பாடலை வெளியிடுவதற்காக தான் ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் ஸ்ருதிஹாசன் செல்லவிருக்கிறார். இதனை அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.