புறக்கணிக்கும் அரச குடும்பம்! கவலையில் மெர்க்கலின் தந்தை

பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர் என்னை சந்திப்பதற்கு முன்னால், அமெரிக்க ஜனாதிபதி அடுத்த மாதம் சந்திக்கவிருப்பதா எனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என மேகன் மெர்க்கலின் தந்தை தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

தாமஸ் மெர்க்கல் வணக்கம் பிரித்தானிய என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது மகள் மற்றும் மருமகன் ஹரி பற்றி கலந்துரையாடியுள்ளார்.

இந்த உரையாடலின் போது, தான் விரைவில் பிரித்தானிய அரண்மனைக்கு சென்று எனது மகள் மற்றும் பிரித்தானிய மகாராணியை சந்திக்கவிருக்கிறேன் என தெரிவித்தார்.

ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக திருமணத்தில் கலந்துகொள்ளாத தாமஸ், திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும் அரண்மனைக்கு அழைக்கப்படவில்லை.

இதுகுறித்து தாமஸ் கூறியதாவது, நான் கொடுத்த பேட்டியால் அரச குடும்பம் என்மீது கோபம் கொண்டிருப்பார்களோ என்று எனக்கு தோன்றுகிறது. மேலும், திருமணம் முடிந்த பின்னர் இதுவரை எனது மகள் என்னுடன் பேசவில்லை.

அரண்மனையில் இருந்து அழைப்பு வரும் என்று நான் அமெரிக்காவில் காத்திருக்கிறேன். அப்படியிருக்கையில், மகாராணி அவர்கள் என்னை சந்திப்பதற்கு முன்னர் அடுத்த மாதம் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருக்கிறார்.

இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார். அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பர்க்கிங்ஹாம் அரண்மனைவில் பிரித்தானிய மகாராணியை சந்திக்கவிருக்கிறார், ஆனால் திகதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.