மன்னார் – புதுக்குடியிருப்பு கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேச பகுதியில் சட்டவிரோதமாக கற்றாழை அகழ்வில் ஈடுபட்ட இருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை நாரா பாடு பகுதியில் வைத்தே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் காணப்பட்ட 253 கிலோகிராம் கற்றாழை செடிகளும், அவை ஏற்றப்பட்ட வாகனமும் கைப்பற்றபட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.