நான் நாய் கிடையாது: பிக் பாஸ் வீட்டில் நித்யா ஆவேசம்..

பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் புது பிரச்சனையோடு சூடு பிடிக்கும் நிலையில் நித்யா கோபமாக பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் கடந்த 17-ஆம் திகதி தொடங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பிக் பாஸ் 1-ல் கலந்து கொண்ட சிலர் அடிக்கடி சர்ச்சையை கிளப்புவது போல இரண்டாவது சீசனிலும் சிலர் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம், எத்தனை பேர் உணவில்லாமல் உள்ளனர், சாப்பாட்டை கொட்டுகிறீர்களே என நடிகர் மகத் கேட்கிறார்.

அதற்கு ஆவேசமடைந்த நித்யா, நான் நாய் கிடையாது, சாப்பிட்டால் நிம்மதியாக சாப்பிட வேண்டும். இல்லையேல் சாப்பிடவே கூடாது என கூறுகிறார்.

அதற்கு சாப்பாட்டை நீங்கள் கொட்டியது தவறு என மகத் கூறுவது போல வீடியோவில் உள்ளது.