பிரித்தானியாவில் பணிக்கு சென்று, அங்கேயே வாழும் பிற நாட்டவர்களுக்கு பிரித்தானிய குடியுரிமை வழங்கப்படமாட்டது என்ற அறிவிப்பை திரும்பப் பெறும் திட்டமில்லை என அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளது.
பிரித்தானிய அரசு சமீபத்தில் குடியுரிமை பெறுவதற்கான விதிகளை கடுமையாக்கியது. அதாவது பிரித்தானியாவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவருக்கு, பிரித்தானிய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக பிரித்தானியாவில் உயர் பணிகளில் இருப்பவர்கள் மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
பிரித்தானியாவின் இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், பிரித்தானியாவில் குடியேறிய அந்நிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய பிரசாரம் மேற்கொண்டு, அரசின் இந்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, குடியுரிமை விதி குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் பேசிய குடியுரிமை அமைச்சர் கரோலின் நோக்ஸ் கூறுகையில்,
அந்நிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவில் பணி புரிபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பில் மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளார்.