ஹிட்லரிடம் ஜேர்மனிய பிரஜாவுரிமை இல்லை, கோத்தாவிடம் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லை!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளதென தான் உணர்வதாக, ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

முதலாவது ஒற்றுமை இருவரும் சைவஉணவை மாத்திரம் உண்பவர்கள். மற்றயது ஹிட்லர் ஜேர்மனியின் பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை கோத்தபாயவிடம் இலங்கை பிரஜாவுரிமை இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹிட்லர் ஒஸ்ரிய பிரஜாவுரிமையை கொண்டிருந்தார். அவர் ஜேர்மனியின் பிரஜாவுரிமையை பெறுவதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜேர்மனியின் பிரஜாவுரிமையை பெறாமல் ஜேர்மனியின் ஜனாதிபதியாக முடியாது என்பதாலேயே ஹிட்லர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறே கோத்தபாயவிடமும் இலங்கை பிரஜாவுரிமை கிடையாது. அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கொண்டுள்ளார். இதன் காரணமாக கோத்தபாயவுக்கும் ஹிட்லருக்கும் ஒற்றுமையுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.