சருமத்தை பாதுகாக்க 650 பெண்களை கொன்று இரத்ததை எடுத்த பெண் மிருகங்கள்

ஹங்கேரிய பிரபுத்துவத்தின் வழி வந்த இவரை “இரத்த கோமாட்டி” என்று உலகம் முழுவதும் அங்கீகரித்தது. அந்த அளவிற்கு உலகிலேயே அதிகமானோர் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார். 16,ம் நூற்றாண்டு மற்றும் 17ம் நூற்றாண்டின் இறுதியில் இவர் 650 இளம் பெண்களை கொன்று குவித்தார். இவருடைய இளமையான சருமத்தை பாதுகாக்க, இளம் பெண்களின் இரத்தத்தில் குளிப்பது நல்லது என்று இவர் நம்பினார். தற்போது நவீன காலத்தில் ஸ்லோவாகியா என்று அழைக்கப்படும் தனது கோட்டையில் தொடர்ந்து கொடூரமான முறையில் அவர்களை கொன்று வந்தார். 300 க்கும் மேற்பட்டவர்கள் அவரை ஒரு தொடர் கொலையாளியாக உறுதி செய்தனர். காட்டேரித்தனத்துடன் இருக்கும் மனிதர்களில் ஒருவராக இவர் இருந்திருக்கிறார். அப்படிபட்ட

கேத்ரின் டி மெடிசி

இத்தாலிய பிரெஞ்சு பிரபுத்துவத்தின் குடும்பத்தில் ஒருவரான கேத்ரின் பல்வேறு மாத்ரீகம், சூனியம் போன்றவற்றோடு தொடர்புடையவராக இருந்து வந்தார். இவர் பிரான்சின் ராணியாக 1547-1559 வரை நீடித்தார். ஆகஸ்ட் 1572 இல் ஹுகெனோட்ஸ் (பிரெஞ்சு கால்வினிஸ்ட் புராட்டஸ்டன்ட்) க்கு எதிராக நடத்தப்பட்ட செயின்ட் பர்த்தோலோம்’ஸ் தினம் படுகொலைக்குப் பின்னால் கேத்தரின் தான் முக்கிய நபராக செயல்பட்டிருக்கிறார் என நம்பப்படுகிறது. சுமார் 30,000 ஹுகெனோட்கள் பாரிசில் ஒரு வார காலமாக படுகொலை செய்யப்பட்டனர். பிரெஞ்சு உணவுகளில் பல வகைகளைக் கண்டுபிடித்த ஒரு சமையல் சூத்திரதாரியாகவும் இவர் விளங்குகிறார். இவர் பிரான்சில் அறிமுகப்படுத்திய உணவு வகைகள், டின்னெர் போர்க், பார்ஸ்லே, லெட்டுஸ், ப்ரோகோலி, பட்டாணி, பாஸ்தா, பர்மேசன், வான்கோழி போன்றவை அவற்றுள் அடங்கும்.

இங்கிலாந்தின் மேரி

மேரி த்யுடோர் இங்கிலாந்தின் முதல் ராணி ஆவார். இவருடைய காலம் 1553-1558 ஆகும். இங்கிலாந்தின் சீர்திருத்தம் மக்கள் கலாச்சாரத்தையும் நம்பிக்கையையும் மாற்றும்போது அது சிம்மாசனத்தையும் எட்டியது. சீர்திருத்தத்தின் விளைவுகளை மாற்றுவதற்கான அவரது பிரச்சாரம், சுமார் 300 பேரை மரண தண்டனைக்குள்ளாக்கியது. அவர் ஹென்றி VIII மற்றும் கேத்ரின் ஆப் ஆர்கான் ஆகியோரின் ஒரே, வயது வந்த மகள் ஆவார். இவருடைய பிரச்சாரம் “மரியன் துன்புறுத்தல்” என்று குறிப்பிடப்படுகிறது. ரணவலோனா 1800 களின் முற்பகுதியில் ரணவலோனாவின் 33 வருடகால ஆட்சியின் விரிவாக்கம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தியதன் மூலம், மடகாஸ்கரில் உள்ள ஐரோப்பிய தாக்கங்களுக்கு எதிரான அவரது எதிர்ப்பிற்கு பிரபலமாக அறியப்பட்டார். ரனவலோனா தனது சொந்த குபும்பத்தையும் வெளிப்படையான வாரிசுகளையும் கொன்று சிம்மாசனத்தில் ராணியாக அமர்ந்தார். அவரது கடுமையான ஒழுக்கம் மற்றும் தண்டனையின் வழிமுறைகள் பாரம்பரியமான நடைமுறையில் மையப்படுத்தப்பட்டன – வரி செலுத்துவது மற்றும் கட்டாய உழைப்பு இவருடைய நடைமுறையானது. இவர் மலகசி கிறிஸ்தவ இயக்கத்தை இழிவு படுத்தினார். கணிசமான இராணுவம் இருந்த போதிலும், வழக்கமான போர், நோய் மற்றும் கட்டாய உழைப்பு ஆகியவற்றின் கடுமையான வழிகள், அவரது படையினரின் உயர்ந்த இறப்பு விகிதத்திற்கு வழிவகுத்தன. மற்றும் 83 வயதில் அவர் இறந்த நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்களைக் அவர் கொன்று குவித்திருந்தார்.

இர்மா க்ரேஸ்

ஒரு நாஜி போர் குற்றவாளி மற்றும் நாசி சித்திரவதை முகாம்களில் இரண்டாம் உயர்ந்த இடத்தைப் பெற்ற பெண் வார்டன், ஆஷ்விட்ஸ் ஹைனா, இர்மா க்ரேஸ் ஒரு மிருகத்தனமான பெண். போர் குற்றங்களுக்காக நேச நாடுகளால் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர், 30,000 பெண் கைதிகளுக்கு அவர் பொறுப்பாளியாக இருந்தார். 22 வயதில், அவர் நூற்றுக்கணக்கான பெண்களை சித்திரவதை செய்தார் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். கைதிகளின் மீது பசியோடு இருக்கும் நாய்களைத் ஏவி விட்டதாகவும் , அத்தகைய செயல்களின் இருந்து பாலியல் மகிழ்ச்சியைப் பெற்றதாகவும் கூறுகிறார். 22 வயதில், அவர் பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ் மிகவும் இளையவராக இருந்தார்.

 

டரியா சால்ட்டிகொவா

ரஷிய பிரபுத்துவத்தில் பிறந்தவர். அரண்மனை உறுப்பினர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர். இதனால் 1750-1760 வரை இருந்த அதிகாரியாளுக்கு இவர் மேல் சந்தேகம் எழுந்ததே இல்லை. இவர் பெண்களையும், இளம் பெண்களையும் மட்டும் குறி வைக்கும் ஒரு கொடுமையான தொடர் கொலைகாரர் மற்றும் கொடுச்செயல் புரிபவர் ஆவார். இவருடைய எஸ்டேட்டில் மாயமான முறையில் இறந்ததாக கருத்தப்பட்ட 140 அடிமைகளை துன்புறுத்தி கொலை செய்திருக்கிறார் என்பது பின்னாட்களில் தெரிய அந்தது. இவரை பொதுவாக சால்டிசிக்கா என்று அழைப்பார்கள். இதே மனநிலை கொண்ட எலிசபெத் பதொரியுடன் இவரை ஒப்பிட்டு இவரையும் “இரத்த கோமாட்டி” என்றுக் கூறுவார்கள்.

 

காஸ்டிலாவின் இசபெல்லா

கேத்ரின் ஆப் அரகோன் என்ற பிரபலத்தின் தாய் இசபெல்லா. கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிப்பதற்கான பயணத்திற்கு இவர் நிதி உதவி புரிந்தார். இஸ்லாம் மற்றும் யூதர்களுடன் இவருக்கு சில நெருக்கமான பிரச்சனைகள் இருந்து வந்தன. அவரது சீர்திருத்தங்கள் யூதர்களையும் முஸ்லிம்களையும் வெளியேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தன. போர்ச்சுகலுக்கு எதிரான போர் இந்த அணுகுமுறையால் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என பலர் நம்புகின்றனர். குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான அவளுடைய தண்டனைகள் கடுமையானதாக மன்னிக்க முடியாததாக இருந்தன. கஸ்டிலில் முதல் முறையாக ஒரு நியமிக்கப்பட்ட போலிஸ் படையைப் பயன்படுத்தியது இவருடைய ஆட்சி காலத்தில் தான்.