சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போல உள்ளது இளைஞர்களை தவறாக வழிநடத்தும் என கூறி பாமக-வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் இதற்கு முன்பே புகைபிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என உறுதியளித்த விஜய் மீண்டும் அதை மீறி நடித்திருப்பது வெட்கக்கேடானது என அவர் ட்விட்டரில் கூறினார்.
மேலும் இது பற்றி சில முன்னணி தொலைக்காட்சிகளிலும் விவாதம் நடந்தது.
இந்நிலையில் தற்போது விஜய்க்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் பேசியுள்ளார். “நாட்டில் இதை விட பெரிய பிரச்சனைகள் நிறைய உள்ளது. உச்ச நடிகர் சிகரெட் பிடித்தார் என்றால் அது ஒரு காட்சி.. வெறும் நிழல். இதற்கு 3 மணிநேர Debate தேவையா?” என கேட்டுள்ளார்.