உயிரை பறிக்கும் கசகசாவை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..?

பழக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. விதைகள் ஆரோக்கியமான பலன்களைக் கொண்டுள்ளன. இவை ஆரோக்கியமானது மட்டுமன்றி பெண்களின் கருவுறும் தகுதியை அதிகரித்து கொழுப்பை சரியான அளவில் பராமரிப்பதற்கு உதவுகின்றன. அதோடு ஆரோக்கியமான சருமத்திற்கும், ஆரோக்கியமான முடிக்கும் இதை உபயோகிக்க முடியும்.

இதில் ஒரு அபரிமிதமான சத்து இருப்பதாகத் தோன்றுகிறது. இருப்பினும், இவ்விதைகள் எதிர்மறையான ஒரு இருண்ட பக்கமும் கொண்டுள்ளது.

விதைகளிலிருந்து பெறப்படும் ஓபியாய்டுகள் துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. எனவே கசகசா பற்றிய ஆரோக்கிய நலன்களைப் பார்க்கும்போது, அதன் தீமையான பலன்களின் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இந்கு இவ்விரண்டை பற்றியும் பார்ப்போம்.

கசகசா மற்றும் அதன் எண்ணெய் பல்வேறு சுகாதார நலன்களுக்காக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இங்கே கசகசாகவின் முக்கிய ஆரோக்கியமான பலன்களை பார்ப்போம்.

கசகசாவில் உண்மையிலேயே நமக்கு ஆரோக்கியம் தருகிற விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

அவற்றைப் பற்றியும் அதை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அளவோடு பயன்படுத்தி செலவையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாமே…

கசகசாவை உட்கொள்வதால் சில எதிர்மறையான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. கசகசா ஓப்பியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை சுத்திகரிக்கும்போது மிகவும் சக்தி வாய்ந்த ஒப்பியேட் மருந்துகளை உருவாக்க முடியும்.
தாங்க முடியாத நீண்ட கால வலிகளுக்கு இவை மருந்தாக பயன்படுகிறது. போதைக்காக தெருவோரங்களில் பயன்படுத்தும் கசகசாவில் இருந்து தயாரிக்கும் ஹெராயின் நிறைய பேரின் வாழ்க்கையை அழிக்கிறது.

நாம் கசகசாவை பயன்படுத்தும் போது இத்தகைய எதிர்மறையான பக்க விளைவுகளையும் கருத்தில் கொண்டு பயன்படுத்த வேண்டும்.

கசகசா டீ

கசகசா தேனீர் விதைகளில் உள்ள ஓபியேட்ஸை உட்கொள்வதற்கான ஒரு சுலபமான வழி. நசுக்கிய விதைகள் மற்றும் காய்களை கொதிக்கவைத்து அல்லது விதைகளை குளிர் பானங்களில் கழுவி அதையும் குடிக்கின்றனர்.

சிலர் ஓபியேட்டை நுகர்வதற்காக இத்தகைய பானங்களை எடுத்து கொள்கிறார்களே தவிர அதன் நற்பலன்களுக்காக அல்ல.

கசகசா தேனீர் தூக்கமின்மையை போக்கவும், தேவையற்ற கவலைகளை போக்கவும் உதவுகிறது. சந்தேகமின்றி, கசகசா தேநீர் தூக்கத்திற்குப் பயனளிக்கலாம், ஏனெனில் ஓபியேட்ஸ் தூக்கத்தைத் தூண்டும், ஆனால் பக்க விளைவுகள்?

கசகசாவை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது மிகவும் ஆபத்தானது. எப்படி என பார்ப்போம். கசகசா தேநீர் எவ்வாறு ஆபத்தாக மாறுகிறது தெரியுமா?

ஓபியேட்டின் அளவு அதிகமாகும் போதும், பல வித விதைகள் சேர்த்து காய்ச்சும் போதும் அதில் உருவாகும் மார்பின் மற்றும் கோடைன் அதிகரித்து போதையை தருகிறது.

உண்மையில், 1996 இல் ஜர்னல் ஆப் போரென்சிக் சயின்சஸின் ஆய்வானது, மோர்ஃபின் அளவு 125 மடங்கு அதிகமாக இருப்பதை காட்டியது.

மோர்ஃபின் அளவு அதிகரிக்கும் போது உயிரிழப்பு கூட ஏற்படலாம். நுரையீரலில் நீர் சேர்ந்து நுரையீரல் சுவர் வழியாக அது ரத்தத்தில் கலக்கும் போது அவர்களுக்கு நுரையீரல் வீக்கம் ஏற்படும். கசகசா தேநீர் அருந்தும் போது மோர்ஃபின் உடலில் அதிகமாக சேர்ந்து உயிரிழப்பு ஏற்படும்.

பக்க விளைவுகள்

இறப்பு மட்டுமே கசகசாவின் பயன்பாட்டை குறைத்திடவில்லை. மற்ற சில பக்க விளைவுகளும் உள்ளன. பலர் கசகசா சாப்பிட்டதும் கடுமையான வயிற்று வலியை அனுபவித்துள்ளனர். அதுவும் ஒப்பியேட்டின் தாக்கம் குறைந்ததும் வலி இன்னும் தீவிரமாகிவிடும்.

இது கசகசாவின் பொதுவான பக்க விளைவு. கசகசாவால், அடுத்த நாள் காலையில் ஹாங் ஓவர் ஸ்டைலில் தலைவலியும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆபத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

தூக்கம் வருவதற்காக கசகசா தேநீர் பருகும் போது குறைந்த அளவே எடுத்து கொள்வது நலம். சமையலுக்கு கசகசாவை பயன்படுத்தும் போதும் அளவில் கவனம் தேவை.

கசகசாவில் இயல்பாக ஓபியம் இல்லை. கசகாவின் வெளிப்புறத்திலும், அதன் விதையிலும் மட்டுமே உள்ளது. எனவே சமையலுக்கு கசகசாவை பயன்படுத்தும் போது அதை நன்றாக கழுவி உபயோகப்படுத்தும் போது விதையின் வெளிதோலில் உள்ள ஓபியம் நீங்கி விடும். கசகசாவின் சுவையை தீங்கின்றி அனுபவிக்கலாம்.

செய்யக்கூடாதவை

பலவித விதைகள் சேர்த்து காய்ச்சும் கசகசா தேநீர் உயிரை பறிக்கும் அளவு ஆபத்தானது. அதை தவிர்க்கவும். மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் போது கசகசா உணவு, தேநீரை தவிர்க்கவும். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சே. எனவே கசகசாவை அளவாக உபயோகிப்பது நலம்.