இந்த சீசன் போட்டியாளர்களில் வீட்டைவிட்டு வெளியில் போவது யார் என்ற பெரிய கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது.
நடிகை மமதி சாரி இன்று வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதை கேட்டு நடிகை மும்தாஜ் கண்ணீர் விட்டார்.
இருவரும் மிக நெருக்கமாக இத்தனை நாள் இருந்ததால் மமதி வெளியில் போகும்முன் “நீ வெளியே போக நான் தான் காரணம்” என கூறி மும்தாஜ் கதறி அழுதார். அதை பார்த்த மமதி “ஷட் அப்” என கூறி திட்டி, அவரை சமாதான படுத்திவிட்டு கிளம்பினார்.