நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்த நடிகர்!

பழம்பெரும் நடிகர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அபார்ட்மெண்ட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்காலி நடிகர் Chinmoy Royக்கு தற்போது 78 வயதாகிறது. மகன் வெளியில் சென்றதால் அவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மாடியில் இருந்து அவர் தவறி விழுந்த சமயத்தில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரின் கை, கால் மற்றும் உடம்பு முழுவதும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சின்மை ராயை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.