எதிர்வரும் புதன் கிழமைக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் ஶ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் தம்மிக ரணதுங்க எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் , செலுத்த வேண்டியுள்ள நிலுவை தொகை தொடர்பில் ஶ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கனிய வள கூட்டுத்தாபனத்திற்கு 12 மில்லியன் ரூபாய் பணம் செலுத்த வேண்டியுள்ளது.