கமல்ஹாசனின் முகத்திரையை கிழித்த மகள் ஸ்ருதியின் பேட்டி!

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சாதி குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்மாறாக மகள் ஸ்ருதிஹாசன் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது.

கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், என் மகள்களின் பள்ளி சேர்க்கை சான்றிதழில் சாதி, மதம் குறித்து நிரப்ப மறுத்துவிட்டேன்.இதுதான் ஒரே வழி, அது அடுத்த தலைமுறைக்கு செல்லும்.

ஒவ்வொரு தனிப்பட்ட சதுரமும் முன்னேற்றத்தை தொடங்கும். கேரளாவும் இதை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் ஐயர் சாதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த கருத்து வரவேற்பை பெற்றிருந்தாலும், நடிகர் ஸ்ருதிஹாசன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு ஐயங்கார் பிரிவை சேர்ந்தவர் என்று கூறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் இப்படி சாதி மறுப்பு தெரிவிக்கையில், அவரது மகள் ஸ்ருதி கூறிய வீடியோவால் அவரது முகத்திரை கிழிந்துள்ளதாக சமூகவலைதளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படம் போட்டுக்காட்டும் கமலுக்கு இது ஒரு குறும்படம் என தெரிவித்துள்ளனர்.