கிரீன் டீ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றாலும், ஒரு சில பாதிப்புகள் உள்ளவர்கள் இதனை குடிக்கக் கூடாது.
கிரீன் டீ இலைகளை நீருடன் சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவதே உடலுக்கு நல்லது.
கிரீன் டீயை பவுடராக வாங்காமல் பச்சை இலையாக வாங்கி உபயோகப்படுத்துவதே சிறந்தது.
- Multiple Sclerosis, சர்க்கரை நோய், சொரியாசிஸ், Rheumatoid Arthritis, பெப்டிக் அல்சர் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.
- அதிக உடல் எடை உள்ளவர்கள், அதனைக் குறைக்க கிரீன் டீயை குடிக்கலாம்.
- சர்க்கரை நோயாளிகள் வெல்லம், சர்க்கரை மற்றும் தேன் போன்றவற்றை சேர்க்காமல் கிரீன் டீயை குடிக்கலாம்.
- அலர்ஜி உள்ளவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள், வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் மற்றும் அல்சர், வைரஸ் தொற்று நோய் உள்ளவர்கள் கிரீன் டீ குடிக்கக் கூடாது.
- கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுவது போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.
- தினமும் கிரீன் டீ குடிக்கும் பழக்கமுடையவர்கள், ஒன்று அல்லது இரண்டு Cup அளவுக்கு மேல் கிரீன் டீயை குடிக்கக் கூடாது.