தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவந்த நடிகர் சிம்பு தற்போது தான் எந்த பிரச்சனைக்கும் செல்லமாம் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
அடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு சமீபத்தில் தான் சிம்பு பட அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார்.
இந்நிலையில் சிம்பு இந்த படத்திற்காக தன் சம்பளத்தை குறைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு அவர் 4 கோடி ருபாய் மட்டுமே சம்பளமாக பெறுகிறாராம். மணிரத்னம் படத்திற்கு பிறகு அவர் 10 கோடி சம்பளம் வாங்கும் திட்டத்தில் இருந்தார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.