தைவானைச் சேர்ந்த இன்டீரியர் டிசைனர் லுரே ஷு. இவருக்கு வயது 42 ஆகிறதாம். இவரது புகைப்படங்கள் இணைதளங்களின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
லுரே ஷு தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். 42 வயதான இவர், 18 வயது பருவ மங்கை போல் இருந்ததை கண்டு பலர் மெய்சிலிர்த்து விட்டனர்.
அழகு தேவதையே! எப்படி நீ, இப்படி இருக்கிறாய், உன் அழகுக்கு என்ன காரணம்? என்று இன்ஸ்டாகிராமில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக வலம் வரும் லுரே ஷு, தனது அழகின் ரகசியத்தை, வார இதழ் ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். அதில். முகத்தை சூரிய கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பதாகவும், அதிக தண்ணீர் அருந்துவதாகவும் கூறியுள்ளார்.
சூரிய ஒளியால் முகத்தில் புள்ளிகள், கருவளையம் வராமல் பாதுகாக்க சன் ஸ்கிரீன் லோசனை அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் லுரே ஷு தெரிவித்துள்ளார்.
எண்ணெய் உணவுகள், பாஸ்புட் உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகளையும் தவிர்க்கிறார். மேலும் லுரே ஷு பிளாக் காபி மற்றும் அதிக அளவு தண்ணீரும் அருந்துகிறார். இத்துடன் அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுகிறார்.
இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!