மாடுகளுக்கு பதிலாக மகள்களை பயன்படுத்தும் விவசாயி….அட கடவுளே…என்ன ஒரு கொடுமை இது?

உத்தர பிரதேச மாநிலத்தில், நிலத்தை உழுவதற்கு, மாடுகளுக்கு பதிலாக, தன் இரு மகள்களை, விவசாயி ஒருவர் பயன்படுத்தி வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஜன்சி மாவட்டத்தில் உள்ள, படகான் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆஷிலால் அஹார்வார், 60; விவசாயி. இவருக்கு ஆறு மகள்கள்; இதில் நான்கு பேருக்கு திருமணமாகி விட்டது. கடைசி இரு மகள்கள், ரவினா, ஷிவானி. இவர்கள், முறையே, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

ஆஷிலால் அஹார்வாரின் குடும்பம், வறுமையில் வாடுகிறது. ஆஷிலால் உட்பட, அவரது மகள்கள் அணிவதற்கு கூட ஆடை இல்லாமல் சிரமப்படுகின்றனர். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தான், இவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இவர், தனக்கு சொந்தமான நிலத்தை உழுவதற்கு, மாடுகளுக்கு பதிலாக, தன் இரு மகள்களை பயன்படுத்தி வருகிறார்.

இந்த வேலையை, ரவினா, ஷிவானி ஆகியோர், பள்ளி நாட்கள் போக, விடுமுறை நாட்களில் செய்து வருகின்றனர். அஹார்வார், பல நபர்களிடம் இருந்து, 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகத் தெரிகிறது.