முதல் 3 நாளில் இந்தியாவையே அதிர வைத்த சஞ்சு வசூல், ஆல் டைம் நம்பர் 1

சஞ்சு பாலிவுட் தாண்டி இந்திய சினிமாவே கொண்டாடி வருகின்றது. சஞ்சய் தத் பற்றி நமக்கு பெரிதும் தெரியவில்லை என்றாலும், ராஜ்குமார் ஹிரானி ப்ராண்ட் நம்மை கவர்ந்த காரணத்தால் இப்படத்திற்கு செம்ம வரவேற்பு.

இந்நிலையில் சஞ்சு இந்தியாவில் மட்டுமே முதல் 3 நாட்களில் ரூ 117 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதன் மூலம் ஆல் டைம் ஓப்பனிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

முதல் இடத்தில் இருந்த சல்மான் கானின் டைகர் ஜிந்தாகியை இதன் மூலம் சஞ்சு பின்னுக்கு தள்ளியுள்ளது.(இவை ஹிந்தி படங்களில் மட்டும் தான், பாகுபலி-2 ஹிந்தி டப்பிங் ரூ 125 கோடி முதல் வாரத்தில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது).

மேலும், அமெரிக்காவில் ரூ 13 கோடி, ஆஸ்திரேலியாவில் ரூ 10 கோடி, அரபு நாடுகளில் ரூ 10 கோடி முறையே வெளிநாடுகளில் சஞ்சு மூன்று நாட்களில் ரூ 60 கோடி வரை வசூல் செய்துவிட்டது.