இந்தியாவின் மத்திய பிரதேசம், மந்சவுர் பகுதியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை சொறுகி கொடுமை செய்தனர். இதனால் அந்த பெண்ணின் குடல் உறுப்புக்கள் கிழிந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து மிதாலி ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், “நாள்தோறும் ஒரு குழந்தை, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டே தான் இருப்பதைப் பார்க்கும் போது மனது வலிக்கிறது.
இதற்காக தான் நாங்கள் பிறந்தோமா? இதற்காகத்தான் பெண் குழதையை பெற்றெடுக்கிறோமா?. இப்படிப்பட்ட ஆண்களாகத்தான் நம் மகன்களை பார்க்க விரும்புகிறோமா?. இதனால் ஆண் பெண் சராசரி அதிகரிக்குமா?” என மிக வருத்தமாக பதிவிட்டுள்ளார்.
It pains me to see this. Everyday a child, a girl, a woman is brutally raped. Is this why we are born? Is this not the reason for female foeticide? Is this the World we want to bring our daughters to? Are these the men we want our sons to become?Is this improving men:women ratio? https://t.co/NU3aFytqwl
— Mithali Raj (@M_Raj03) 1 July 2018