நல்லூர் பிரதேச சபை உபதவிசாளரின் சகோதரன் உட்பட மூவரை ஆவா குழுவினர் என மானிப்பாய் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த வாரம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், வீட்டில் இருந்தவர்கள் மீதும் வாள்வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் காவற்துறையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவில், கொக்குவில் மற்றும் இணுவில் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவர் ஆவா குழுவை சேர்ந்தவர் எனவும், அவர்கள் இருவரையும் நீண்டகாலமாக தேடி வந்ததாகவும், அவர்களில் ஒருவர் நல்லூர் பிரதேச சபை உபதவிசாளரின் சகோதரன் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.