கோத்­தா ஆட்சிக்கு வந்தால் ? – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயல்திறன் மீதான அதி­ருப்­தி­யி­லேயே சிலர் சர்­வா­தி­காரி ஒருவர் ஆட்­சிக்கு வர­வேண்டும் என்ற கருத்­தினை முன் ­வைத்­துள்­ளனர்.

ஆனால் ஜன­நா­யக சூழலில் கோத்­த­பா­ய­விடம் ஆட்சி செல்­வது எந்­த­ளவு பார­தூ­ர­மா­னது என்­பதை அறி­யா­த­வர்­க­ளாக உள்­ளனர். கோத்­த­பாய தனது ஆதிக்­கத்தை செலுத்த அடக்­கு­மு­றையை கையாள்வார் என பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ கள­மி­றங்­குவார் என பலரால் எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது.

இதே நிலையில் ஹிட்லர் போன்ற இறுக்­க­மான தன்­மை­யி­லான ஆட்சி அமைந்­தாலும் பர­வா­யில்லை என்ற கருத்­துக்கள் தேரர்கள் உள்­ளிட்ட ஒரு சிலரால் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் இது குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர்  சுமந்­திரன்  தெரி­விக்­கை­யி­லேயே  இதனை குறிப்­பிட்டார்.

அவர் இது குறித்து   மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஹிட்லர் போன்ற ஒரு ஆட்சி அமைந்­தாலும் பர­வா­யில்லை என அஸ்­கி­ரிய அனு­நா­யக தேரர் ஒருவர் குறிப்­பிட்­டி­ருந்தார். அவர் கூறிய கருத்­துடன் இணங்கும் சிந்­தனை கொழும்பில் ஒரு சில­ரிடம் உள்­ளது.

காரணம் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்தில் இருந்து எத­னையும் சீராக செய்­ய­வில்லை.  ஆனால் ஒரு சர்­வா­தி­கா­ரியின் கையில் ஆட்சி முறைமை இருந்தால் அவர் அவற்றை சரி­யாக செய்­விப்பார் என்ற ஒரு எண்ணம் உள்­ளது. குறிப்­பாக கோத்­தா­பய ராஜபக் ஷ கொழும்பு நகரை சுத்­த­மாக வைத்­தி­ருந்தார், சீர்­தி­ருத்­தினார்  என்ற கருத்­துக்­களை கூறு­கின்­றனர்.

அவ்­வா­றான ஒரு­வரின் கையில் ஆட்­சியை கொடுத்தால் இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் ஒரு கட்­டுப்­பாட்­டுடன் செய்வார்  என்ற எண்ணம் சிலர் மனதில் உள்­ளது.

அதன் வெளிப்­பா­டாக தான் அந்த அனு­நா­யக தேரர் உள்­ளிட்ட ஒரு சிலரின் கருத்­துக்­களை நாம் பார்க்­கின்றோம். ஆனால் இவர்கள் முன்­வைத்த கருத்­துக்கள் எந்­த­ளவு பார­தூ­ர­மா­னவை என்­பதை அவர்கள் விளங்­கிக்­கொள்­ள­வில்லை.

ஒரு ஜன­நா­யக  சூழலில் அவ்­வா­றான ஒரு முறை­மைக்கு செல்­வது நாட்­டுக்கு பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். ஏனெனில் கோத்­த­பாய ராஜபக் ஷ தாம் வினைத்­தி­ற­னாக செய்ய வேண்டும் என்­ப­தற்­காக கட்­டுப்­பாட்­டுக்கு அப்பால் சென்று அடக்­கு­முறை மூல­மாக தமது இலக்கை அடை­யவே முயற்­சிப்பார்.

அடக்­கு­முறை என்­பது ஜன­நா­ய­கத்­துக்கு நேர் எதி­ரான ஒன்­றாகும். ஆகவே, அதனை மறந்து சிலர் உட­ன­டி­யாக அபி­வி­ருத்­தி­களை செய்ய  முடியும், நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்ற கருத்­துக்­களை கூறிக்­கொண்­டுள்­ளனர்.

எனினும் எமது நாட்டில் அவ்­வா­றான ஒரு சிந்­த­னைக்கு மக்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்­டார்கள் என நினைக்­கின்றோம். இப்­போ­துள்ள சூழலில் இன்று அவ்­வா­றான ஒரு சிந்­தனை உள்­ளது.

மேல் மட்­டத்தில் அவ்­வா­றான சிந்­த­னைகள் உள்­ளன. ஆனால் பெரும்­பா­லான சிங்­கள மக்­களும் கோத்­த­பாய ராஜபக் ஷ என்ற சர்­வா­தி­கார தலை­வரை ஆத­ரிக்க மாட்­டார்கள்  என்­பதே உண்மை.

அதேபோல் பொது எதி­ரணி தமது வேட்பாளர் குறித்து சிந்திக்கும் போது  வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் என்ற அடிப்படையில் சிந்தித்தால் கோத் தபாய ராஜபக் ஷவை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.

அதேபோல் அனுநாயக தேரரின்  கருத்து கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல் எதிர்பார்ப்புக்கு பாரிய இடியாக வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.